Krishnagiri News: 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. பள்ளிமுடிந்து வரும்போது கொடூரம்.. மூவர் கும்பல் கொடூர செயல்.!
பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து வரும் வழியில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, மலைக்கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கு 8 வயதுடைய மகள் இருக்கிறார். இந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவிக்கு குடும்பத்தினர் கண்முன் நேர்ந்த சோகம்.. வீடு சுத்தம் செய்யும் பணியில் விபரீதம்.!
நடந்து வந்தார்:
கடந்த புதன்கிழமையின்போது வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற மாணவி, பள்ளி மாலையில் முடிந்ததும் பிற குழந்தைகளுடன் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். சிறுமி பொறுமையாக நடந்து வந்ததால், பிற குழந்தைகள் முன்னதாகவே நடந்து சென்றுள்ளனர்.

வன்கொடுமை:
அச்சமயம், அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், சிறுமியை புதர் பகுதிக்குச் தூக்கிச் சென்று கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். பின் வீட்டுக்குச் சென்று நடந்ததை கூறிய நிலையில், அதிர்ந்துபோன பெற்றோர் உடனடியாக குழந்தைகள் நலத்துறையின் 1098 எண்ணுக்கு தொடர்பு கொண்டு விபரத்தை தெரியப்படுத்தினர்.
மருத்துவமனையில் அனுமதி:
பின் நேரில் வந்த அதிகாரிகள் சிறுமியை உடனடியாக சிகிச்சைக்கு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், மேல் சிகிச்சைக்காக மறுநாள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குறைந்த முதலீடு, அதிக வட்டி, டபுள் லாபம்.. தேனாய் பேசி திகட்ட திகட்ட கேடி வேலை செய்த தோழிகள்.. நெல்லையில் ஷாக்.!