தர்மபுரி: பள்ளி ஆசிரியையின் வீட்டில் திருட்டு; 100 சவரன் நகைகள் கொள்ளை..!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அத்தியமான்கோட்டை, நல்லம்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் ஷெர்லின் பெல்மா (வயது 44). இவர் நல்லம்பள்ளியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
ஆசிரியைக்கு திருமணம் ஆகாத நிலையில், அவரின் தந்தை தேவதாசும், அரசு ஊழியராக பணியாற்றி இயற்கை எய்திவிட்டார். இதனால் தனது தாய் மேரியுடன் ஆசிரியை வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: நாய் கடித்ததால் முதியவருக்கு நேர்ந்த சோகம்; முதியவர் பரிதாப பலி.!
100 சவரன் நகை திருட்டு
நேற்று மருத்துவ சிகிச்சைக்காக மேரி வேலூர் சென்றுவிட,ஷெர்லின் வீட்டினை பூட்டி பள்ளிக்கு சென்றுள்ளார். மாலையில் வீட்டிற்கு வந்த ஷெர்லின், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 100 சவரன் நகை, ரூ.1.50 இலட்சம் பணம் மாயமானது தெரியவந்தது.
இதனையடுத்து, தகவல் அறிந்த காவல்துறையினர், 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 14 வயது சிறுவனுக்கு ஊஞ்சலில் காத்திருந்த எமன்; விளையாட்டு வினையான சோகம்.!