நாய் கடித்ததால் முதியவருக்கு நேர்ந்த சோகம்; முதியவர் பரிதாப பலி.!

நாய் கடிதத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏ.ஆர் திருமண மண்டபம் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (வயது 68).
இவர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக நடத்துனராக பணியாற்றி, தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக, ராஜேந்திரனை தெருநாய்கள் கடித்துள்ளது. அதற்கு முறையான சிகிச்சை பெறாமல், அவர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: 14 வயது சிறுவனுக்கு ஊஞ்சலில் காத்திருந்த எமன்; விளையாட்டு வினையான சோகம்.!
Dog | File Pic
இதனால் ரேபிஸ் நோய் தாக்கத்திற்கு உள்ளாகிய நபர், கடந்த 1ம் தேதி தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
அங்கு தொடர் சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தர்மபுரி நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், நாய் கடித்தால் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: உள்ளூர் சேனலில் திடீரென ஒளிபரப்பான ஆபாச படம்; அதுவும் நம்ம தமிழ்நாட்டில்.. ஷாக் சம்பவம்.!