14 வயது சிறுவனுக்கு ஊஞ்சலில் காத்திருந்த எமன்; விளையாட்டு வினையான சோகம்.!



Dharmapuri 14 Year Old Boy Dies Swing

சிறுவன் ஊஞ்சலில் விளையாடியபோது, கழுத்து இறுக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர், போளைப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சங்கர் (வயது 39). இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சங்கரின் மனைவி காயத்ரி. 

தம்பதிகளுக்கு 14 வயதுடைய நேதாஜி, அலெக்ஸாண்டர், மணிமாறன் என 3 மகன்கள் இருக்கின்றனர். மூத்த மகன் நேதாஜி, அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்.

இதையும் படிங்க: உள்ளூர் சேனலில் திடீரென ஒளிபரப்பான ஆபாச படம்; அதுவும் நம்ம தமிழ்நாட்டில்.. ஷாக் சம்பவம்.!

ஊஞ்சலால் நேர்ந்த சோகம்

சம்பவத்தன்று, சங்கர், அவரின் மனைவி வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டனர். வீட்டில் இருந்த சிறுவன் நேதாஜி, மாலை சுமார் 4 மணியளவில் தாத்தாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

Dharmapuri

அங்கு புளியமரத்தில் ஊஞ்சல் கயிறு கட்டி விளையாட, அப்போது எதிர்பாராத விதமாக சிறுவனின் கழுத்து இறுக்கியுள்ளது. 

இந்த சம்பவத்தில் மூச்சுத்திணறி சிறுவன் நேதாஜி, நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து கரம்பைநல்லூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: #Breaking: கார் விபத்தில் அதிமுக புள்ளி உட்பட 3 பேர் பலி.. கார் - லாரி நேருக்கு நேர் மோதி சோகம்.!