கள்ளக்காதலால் தர்ம அடி வாங்கி போலீசாரின் மீது புகார் கூறிய ஈபி ஊழியர்..! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்.

கள்ளக்காதலால் தர்ம அடி வாங்கி போலீசாரின் மீது புகார் கூறிய ஈபி ஊழியர்..! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்.


illegal-relationship-eb-officer-police

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நேரு நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(48). இவர் ஈபி அலுவலகத்தில் வேலை செய்து வந்துள்ளார். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அத்தியாவசிய தேவையை தவிர மற்ற எந்த வேலைக்கு ஊழியர்கள் செல்லாமல் இருந்து வருகின்றனர்.

ஆனால் பழனிச்சாமி மின் ஊழியராக இருப்பதால் தொடர்ந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். அதேபோல் கடந்த செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்று மதியம் 3 மணியளவில் வீடு திரும்பியவர் மீண்டும் மாலை வேலைக்கு சென்றுள்ளார்.

அலுவலகம் வந்த பழனிச்சாமி தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களிடம் தன்னை ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறியுள்ளார். அச்சம்பவத்தை குறித்து கூடுதலான தகவலை பழனிச்சாமியிடம் சக ஊழியர்கள் விசாரித்துள்ளனர்.

police

அப்போது பழனிச்சாமி தான் வழக்கம்போல் வேலைக்கு வரும் போது பாதுகாப்பு போலீசார் தன்னை தடுத்து நிறுத்தியதாகவும், ஐடி கார்டை காண்பிப்பதற்கு முன்பாகவே தன்னை லத்தியால் கடுமையாக தாக்கியதாகவும் கூறியுள்ளார். அவர் கூறியதை கேட்டு உண்மை என நினைத்து கொண்ட சக ஊழியர்கள் மின்வாரிய சங்க தலைவர் வரை புகாரை கொண்டு சென்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி அச்சம்பவம் குறித்து சமூக வலைத்தளத்திலும் பரப்பியுள்ளனர். மேலும் பழனிச்சாமிக்கு ஆதரவாக பல்வேறு ஆர்பாட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர் சக ஊழியர்கள். அதுமட்டுமின்றி மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜனிடமும் புகார் ஒன்றை கொடுத்துள்ளனர்.

police

மேலும் இது குறித்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட போலீசாரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் பழனிச்சாமியை தாக்கவில்லை என கூறியுள்ளனர். அதனை அடுத்து பழனிச்சாமி அலுவலகத்திலிருந்து வீடு வரையான பாதையில் உள்ள சிசிடிவி கேமராவினை பார்த்துள்ளனர். அப்போது தான் தெரிந்தது அவர் அந்த வழியாக வரவே இல்லை என்று தெரிந்துள்ளது.

அதன்பிறகு போலீசார் சக ஊழியர்கள் முன்பு பழனிச்சாமியை விசாரித்துள்ளனர். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. அதாவது கடந்த செவ்வாய் கிழமை பழனிச்சாமி தனது கள்ளக்காதலின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கள்ளக்காதலியின் கணவர் பழனிசாமியை கடுமையாக தாக்கியதை அடுத்து அதனை மறைக்க போலீசார் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார்.

அதனை அடுத்து மின்வாரியம், சக ஊழியர்களை பொய் சொல்லி அலைக்கழிக்க வைத்ததற்கும், போலீசார் மீது அவதூறு கூறியதற்கும் பழனிச்சாமியை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.