திருமணத்திற்கு பிறகும் காம ஆட்டம் போட்ட இளம் பெண்.. ஒன்றரை வயது குழந்தையுடன் துண்டு துண்டாக வெட்டிக் கொலை!

திருமணத்திற்கு பிறகும் காம ஆட்டம் போட்ட இளம் பெண்.. ஒன்றரை வயது குழந்தையுடன் துண்டு துண்டாக வெட்டிக் கொலை!


Illegal affair man killed women and her 1 year old baby in Theni

தேனி அருகே தகாத உறவினால் இளம் பெண் ஒருவரும் அவரது ஒன்றரை வயது குழந்தையும் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள க.புதுப்பட்டி சொசைட்டி தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி(22), இவருக்கும் மதுரை மாவட்டம் பேரையூர் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் காசிராஜன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து, இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் கரண் சர்மா என்ற குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு கலைச்செல்வி பெரிய குளத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்துவந்தபோது சின்னமனூர் தேவர் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மற்றும் இறைச்சி கடை வைத்துள்ள சிலம்பரச கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

சிலம்பரச கண்ணனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கலைச்செல்விக்கு திருமணம் முடிந்தும், அவர் தனது கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2020 செப்டம்பர் 9 ஆம் தேதி கலைச்செல்வி தனது குழந்தையை தூக்கிக்கொண்டு பேரையூர் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார்.

ஆனால் கலைச்செல்வி பேரையூர் செல்லவில்லை. அதேநேரம் அவர் வீட்டிற்கும் திரும்பவில்லை. இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசார், கலைச்செல்வியின் கால் ஹிஸ்டரியை வைத்து சிலம்பரச கண்ணனை விசாரணை செய்தனர்.

இதில் சிலம்பரச கண்ணன் கூறிய வாக்கு மூலத்தை கேட்டு அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். "பேரையூர் செல்வதாக கூறிவிட்டு குழந்தையுடன் சென்ற கலைச்செல்வி நேராக சின்னமனூரில் உள்ள சிலம்பரச கண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே சிலம்பரச கண்ணன் கார் வாங்கி ஓட்டுவதற்க்காக கலைச்செல்வி தனது நகைகளை சிலம்பரச கண்ணனிடம் கொடுத்துள்ளார்.

நாளடைவில் நகைகள் எங்கே என குடும்பத்தினர் கேட்க, பயந்துபோன கலைச்செல்வி தனது நகைகளை திருப்பி தரும்படி சிலம்பரச கண்ணனிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக சம்பவத்தன்றும் சிலம்பரச கண்ணன் வீட்டிற்கு சென்ற கலைச்செல்வி தனது நகைகளை திருப்பி கொடு, அல்லது தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொள் என வற்புறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிலம்பரச கண்ணன் கலைச்செல்வி மற்றும் அவரின் ஒன்றரை வயது மகன் இருவரையும் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளான். பின்னர் தனது இறைச்சிக்கடையில் வேலைபார்த்துவரும் ராஜேஷ் என்ற சிறுவனை கடையில் இருக்கும் கத்தியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருமாறு கூற, கத்தியுடன் சிறுவன் வீட்டிற்கு வந்தபிறகு, இருவரும் சேர்ந்து கலைச்செல்வி மற்றும் குழந்தையின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி, சாக்குப்பையில் போட்டு ஆட்டோவில் ஏற்றி சின்னமனூர் முத்துலாபுரம் செல்லும் சாலையில் உள்ள அய்யனார்குளம் பகுதியில் வீசி சென்றுள்ளனர்".

இந்நிலையில் சிலம்பரச கண்ணன் கூறிய பகுதிக்கு சென்ற போலீசார், அந்த பகுதியில் கலைச்செல்வி மற்றும் அவரது குழந்தையின் எலும்புகளை கண்டுபிடித்து தடயவியல் துறையினர் அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனை அடுத்து கொலைக்கு உதவியாக இருந்த சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிய நிலையில், முக்கிய குற்றவாளியான சிலம்பரச கண்ணனை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கள்ளகாதலால் நடந்த இந்த கொடூர கொலை அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.