பெண்மருத்துவர் வழக்கில் என்கவுண்டர் செய்யப்பட்ட குற்றவாளிகள்! ஹீரோவாக கொண்டாடப்படும் இவர் யார்? வெளியான ஷாக் பின்னணி!
பெண்மருத்துவர் வழக்கில் என்கவுண்டர் செய்யப்பட்ட குற்றவாளிகள்! ஹீரோவாக கொண்டாடப்படும் இவர் யார்? வெளியான ஷாக் பின்னணி!

கடந்த வாரம் ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் டூ வீலர் பஞ்சரான நிலையில், லாரி டிரைவர்களால் வலுக்கட்டாயமாக தூக்கி செல்லப்பட்டு, வாயில் மதுவை ஊற்றி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும் அதனை தொடர்ந்து கொடூரமாக எரித்தும் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, நவீன் மற்றும் சிறுவர்களான ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த நிகழ்வுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டுமென குரல்கள் ஓங்கி ஒலித்து வந்தது. இந்நிலையில் இன்று காலை 4 குற்றவாளிகளும் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர்.இதற்கு பலரும் ஆதரவாக குரல்கொடுத்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் என அனைவரும் போலீசாருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த என்கவுண்டருக்கு அனுமதி வழங்கிய சைபராபாத் போலீஸ் கமிஷ்னர் வி.சி.சஜ்ஜனரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இவர் 2008ம் ஆண்டு வாரங்கல் ஆசிட் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மூன்று பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் என்கவுண்டரின் பொது காவல்துறைக் குழுவுக்கு தலைமை தாங்கியவர் போலீஸ் சூப்பிரண்டு வி.சி.சஜ்ஜனரே ஆவர்!