தமிழகம்

நடுரோட்டில் மனைவி கண்முன்னனே கணவன் செய்த காரியம்! அழுது தடித்த மனைவி!

Summary:

Husband suicide in front of wife in vellore

வேலூர் மாவட்டம் கணியம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ்குமார். 32 வயதான இவருக்கும், புவனேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணம் ஆன நாளில் இருந்தே கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாகவும், அடிக்கடி சண்டையும் நடந்துள்ளது.

இந்நிலையில் இருவரும் ஒன்றாக பைக்கில் சென்றுள்ளனர். பைக்கில் செல்லும்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ்குமார் கலெக்டர் அலுவலகத்தின் அருகே இருந்த மேம்பாலத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு திடீரென கீழே குதித்துள்ளார்.

கணவர் தன் கண்முன்னே கீழே குதித்ததில் அதிர்ச்சி அடைந்த புவனுஸ்வரி மேம்பாலத்தின் கீழே இறங்கி சென்று பார்த்ததில் மகேஷ்குமார் இரத்த வெள்ளத்தில் உயிர் இழந்து கிடந்தார். கணவன் தன் கண்முன்னே தற்கொலை செய்துகொண்டதை பார்த்து புவனேஸ்வரி கதறி அழுதார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement