தமிழகம்

கணவன் இறந்த சிறிது நேரத்தில் மனைவி செய்த செயல்! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்.!

Summary:

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில்கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சாந்தாதேவி என்பவருக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த தம்பதி குழந்தையுடன் சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வந்துள்ளனர். ராஜா சித்தாலப்பாக்கம் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் ராஜாவிற்கு அதிக கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்பாதிக்கும் பணத்தை தன்னிடம் கொடுக்க வேண்டும் என சாந்தாதேவி கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறு முற்றியதால் சாந்தாதேவி மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட ராஜா கடந்த சனிக்கிழமை இரவு மனைவியுடன் தகராறு செய்துவிட்டு தனது அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனைப்பார்த்த சாந்தாதேவி அதிர்ச்சியடைந்து உறவினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து ராஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சென்னை வந்தனர். அவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ராஜாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சாந்தாதேவி குடும்பத்தார் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைவைத்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி உறவினர்களிடம் ராஜாவின் உடலை ஒப்படைத்தனர்.

ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறிது நேரத்தில் குழந்தைக்கு பால் பாட்டில் எடுக்க வேண்டும் என கூறிய சாந்தாதேவி, போலீசார் பாதுகாப்புடன் வீட்டில் நுழைந்து வீட்டில் வைத்திருந்த அனைத்து தங்க நகைககளையும் எடுத்து சென்றதாக ராஜாவின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


Advertisement