பழைய பதிவால் புதிதாக வெடித்த வெடிகுண்டு! விஜய் சேதுபதியின் மறைமுக பேச்சால் கடும் எதிர்ப்பு..!!!
மனைவியின் கள்ளத்தொடர்பு..! மனைவி சொன்ன ஒத்த வார்த்தை.! வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, உயிரை விட்ட கணவன்.!
திருப்பூர் மாவட்டம், சாமுண்டிபுரம் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியராஜன். 27 வயது நிரம்பிய இவருக்கு சித்ரா என்ற பெண்ணுடன் திருமணமாகி, இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. பாண்டியராஜன் அவர் வசிக்கும் பகுதியில் லோடு மேனாக வேலை செய்து வந்துள்ளார்.
பாண்டியராஜனின் மனைவி சித்ரா அங்கிருக்கும் பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், பாண்டியராஜனின் மனைவி சித்ராவிற்கும் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த அருண் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்தநிலையில் இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இவர்களது பழக்கம் பாண்டியராஜனுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாண்டியராஜன் அவரது மனைவி சித்ராவை கண்டித்துள்ளார். ஆனால் சித்ராவோ எனக்கு அவருடன் தான் வாழ ஆசை, என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். கணவன் சொல்லியும் மனைவி கேட்காததால், கடும் விரக்தியில் இருந்த பாண்டியராஜன் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அவர் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.