"என் கூட வரமாட்டியா...." உறவுக்கு அழைத்த கணவன் கொலை.!! மனைவி, கள்ளக்காதலன் வெறி செயல்.!!



husband-murdered-for-forcing-wife-to-intimate-two-arres

மத்திய பிரதேச மாநிலத்தில் கள்ளக்காதலில் இருந்த மனைவியை தன்னுடன் உடலுறவு வைக்குமாறு வற்புறுத்தியதால் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் பஞ்சாரா. இவருக்கு திருமணமாகி சம்போ பாயி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கைலாஷின் மனைவி, பிரதீப் என்ற வாலிபருடன் தகாத உறவில் இருந்துள்ளார். இதனைப் பற்றியறிந்த கைலாஷ் தனது மனைவியை கண்டித்துள்ளார். மேலும் தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தியதாக தெரிகிறது.

Madhya pradesh

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று தனது மனைவியை உடலுறவுக்கு வற்புறுத்தியிருக்கிறார் கைலாஷ். இது தொடர்பாக இருவரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கைலாஷின் மனைவி கயிற்றால் கழுத்தை நெரித்து கைலாஷை கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது கள்ளக்காதலன் உதவியுடன் உடலை அடக்கம் செய்திருக்கிறார். மேலும் தனது கணவரை காணவில்லை என காவல்துறையிடமும் நாடகமாடியுள்ளார்.

இதையும் படிங்க: "மாமியார் வீட்டில் உல்லாசம்..." மகள், காதலனை தீர்த்து கட்டிய தந்தை.!!

இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் சம்போ தனது கணவரை கொலை செய்து கள்ளக்காதலன் உதவியுடன் உடலை மறைத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரையும் அவரது கள்ளக்காதலனையும் கைது செய்த காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அண்ணியுடன் முறை தவறிய காதல்... இளைஞர் படுகொலை.!! அண்ணன் கைது.!!