கணவரின் கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவி... ஆத்திரத்தில் கணவரின் வெறி செயல்!! Husband murder his wife because wife asked about his affair

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் - மேரி சைலஜா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வரும் ஜார்ஜ் உடன் வேலை செய்யும் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இதனை கண்டித்து மேரி சைலஜா கணவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அதனை காதில் வாங்கி கொள்ளாமல் ஜார்ஜ் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். சம்பவத்தினத்தன்று வேலைக்கு செல்ல தயாரான கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் ஆத்திரமடைந்த ஜார்ஜ் மனைவியை கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

Affair

அதனையடுத்து உறவினர்கள் சைலஜாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேரி சைலஜாவின் தாய் அளித்த புகாரின் பேரில் அஞ்சுகிராம் போலீசார், ஜார்ஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில் சிகிச்சை பெற்று வந்த மேரி சைலஜா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து ஜார்ஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.