தமிழகம்

மனைவி சாந்தியின் நடத்தையில் சந்தேகம்..! அனாதையான இரண்டு பிள்ளைகள்..! பாண்டிச்சேரியில் நடந்த பரபரப்பு சம்பவம்.!

Summary:

Husband killed wife near Pondichery

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவரது கணவர் மனைவியை குத்தி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி வேல்ராம்பட்டு திருமகள் நகர் 4வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் விஜயன்(55). அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவருக்கு சாந்தி(52) என்ற மனைவி இருந்துள்ளார். சாந்தி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே தனது மனைவியின் நடத்தையில் அவரது கணவர் விஜயனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் கணவன் மனைவி இருவருக்கும் இடையே இன்றும் வாக்குவாதம் ஏற்பட்டு நிலையில் தனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார் விஜயன். 

இதனை அடுத்து சாந்தி தூங்கிக் கொண்டிருக்கும் போது அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று தனது மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு சாந்தியின் உறவினர் கொடுத்த புகாரையடுத்து விஜயனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் அவரது கணவர் அவரை குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement