தமிழகம்

ஆண்களுடன் சிரித்து சிரித்து பேசிய மனைவி! கணவன் எடுத்த விபரீத முடிவு! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.

Summary:

Husband killed wife for illegal relationship

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் செபாஸ்டின். இவரது மனைவி மோட்சம். கூலி தொழில் செய்துவந்த செபாஸ்டின் தனது மனைவி அக்கம் பக்கத்தில் உள்ள ஆண்களிடம் சிரித்து சிரித்து பேசுவதால் அவர் மீது சந்தேகம் அடைந்துள்ளார். தனது மனைவியிடம் செபாஸ்டின் பலமுறை கூறியும் அவர் அந்த பழக்கத்தை மாற்றவில்லை.

இது தொடர்பாக கணவன் மனைவி இருவரிடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில் விறகு பொறுக்க மோட்சம் சென்றிருந்தபோது அவரை பின்தொடர்ந்து சென்ற அவரது கணவர் செபாஸ்டின் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த குற்றம் சம்மந்தமான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதி மன்றத்தில் நடந்துவந்தது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

தனது மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக செபஸ்டினுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


Advertisement