கள்ளக்காதலனுடன் செல்ல கணவனுக்கு 1 லட்சம் பேரம் பேசிய மனைவி! கணவன் எடுத்த அதிரடி முடிவு!

கள்ளக்காதலனுடன் செல்ல கணவனுக்கு 1 லட்சம் பேரம் பேசிய மனைவி! கணவன் எடுத்த அதிரடி முடிவு!


Husband killed his wife for illegal relationship

குடி, கள்ளகாதலால் இன்று பல்வேறு குடும்பங்கள் நாசமாக போகின்றது. அப்படி ஒரு சம்பவம்தான் இது. சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. மரம்வெட்டும் தொழில் நடத்திவந்த இவர் குடிக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

இதனால் இவருக்கும், இவரது மனைவி தங்கமணி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. பலநேரங்களில் தங்கமணி கோவித்துக்கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு செல்வதும், பின்னர் பாலசுப்பிரமணி சமாதானம் செய்து கூட்டிவருவதும் வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் வழக்கம்போல் இப்படி ஒரு சமப்வம் நடக்க தங்கமணி அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த முறை பாலசுப்பிரமணி சமாதானம் பேசியும் தங்கமணி வீட்டுக்கு வருவதாக இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணி தான் கொண்டுசென்ற அரிவாளால் தங்கமணியை வெட்டியுள்ளார்.

Crime

இதனால் இரத்த வெள்ளத்தில் மிதந்த தங்கமணியை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தங்கமணி இறந்துவிட்டார்.

இதனை அடுத்து போலீசார் விசாரணையில் பலதிடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதில், தங்கமணிக்கு வேறொரு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், தான் சமாதனம் பேச சென்றபோது தன்னை பிரிந்து கள்ளக்காதலனுடன் சேர தனக்கு ஒரு லட்சம் தருவதாக பேரம்பேசியதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்து அவரை வெட்டியதாகவும் பாலசுப்பிரமணி கூறியுள்ளார்.