5 வருடம் கழித்து வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பிய கணவர்: மனைவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!Husband killed his wife for illegal activities in vilupuram

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் இளையராஜா(37), இவரது மனைவி சாந்தி(29). வெளிநாட்டில் வேலைபார்த்துவந்த இளையராஜா சிலநாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இளையராஜா வெளிநாட்டில் இருந்த சமயம் பிள்ளைகளை தனது தாய் வீட்டில் விட்டுவிட்டு அவரது மனைவி சாந்தி அருகில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் 5 வருடங்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பிய இளையராஜாவுக்கும், அவரது மனைவி சாந்தி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. மனைவியின் நடத்தையில் இளையராஜா சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது.

Crime

இதனை அடுத்து சமபவத்தன்று வழக்கம்போல் வேலை முடிந்து இரவு வீட்டுக்கு திரும்பியுள்ளார். காலை நீண்ட நேரமாகியும் சாந்தி கதவை திறக்காததால் உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது சாந்தி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

அவரது தலையில் சுத்தியலால் தாக்கியும், கழுத்தில் கயிறால் கட்டி ஜன்னலில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் சாந்தி இறந்து கிடந்தார். இதனை அடுத்து மனைவியை கொலைசெய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் இளையராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.