நண்பர்களை மது அருந்துவதற்கு வீட்டிற்கு அழைத்துவந்த கணவன்! ஒரு நண்பன் செய்த செயலால் மனைவி பரிதாப மரணம்!

நண்பர்களை மது அருந்துவதற்கு வீட்டிற்கு அழைத்துவந்த கணவன்! ஒரு நண்பன் செய்த செயலால் மனைவி பரிதாப மரணம்!


husband killed his wife for his friend

சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவர் கார் ஓட்டுநராக இருந்துவந்துள்ளார். இவருக்கும் என்ற பெண்ணிற்கும் திருமணமாகி இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

உதயகுமார் அடிக்கடி தன்னுடைய வீட்டிற்கு நண்பர்களை அழைத்து வந்து மது அருந்தி வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல உதயகுமார் தன்னுடைய நண்பர்களுடன் வீட்டில் மது அருந்துகொண்டிருந்துள்ளார். அப்போது உதயகுமாரின் நண்பன் மாணிக்கவேல் என்பவர் மணிமேகலையை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததாக கூறப்படுகிறது.

Murder

இதனால் அதிர்ச்சியடைந்த மணிமேகலை, இதுகுறித்து உறவினர்களிடம் கூறிவிட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை தெரிந்துகொண்ட உதயகுமார், மணிமேகலை மீது கோபமடைந்து சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். 

மணிமேகலையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ரத்தவெள்ளத்தில் கிடந்த மணிமேகலையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட மணிமேகலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.