தமிழகம்

காதலித்து சந்தோசமாக வாழ்ந்த கணவன்-மனைவி.! நொடிப்பொழுதில் மனைவியை கொலை செய்த கணவன்.!

Summary:


நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்பவர் கடந்த மூன்று வருடங்களுக்


நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்பவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக மல்லிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது ராஜகோபால் சலூன் கடையில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மல்லிகா பொன்ராஜ் என்பவரின் கேபிள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். 

காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதிகளுக்கு இடையே சமீப காலமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த புதன்கிழமை காலை இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மல்லிகா வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார்.

கடும் கோவத்தில் மல்லிகாவின் அலுவலகத்திற்கு கத்தியுடன் வந்த ராஜகோபால், மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் மல்லிகா பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவரை காப்பாற்ற வந்த பெண்மணிக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுதொடர்பாக வல்லக்கு பதிவு செய்து மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து தப்பி ஓடிய ராஜகோபாலை தேடி வருகின்றனர்.


Advertisement