கோபத்தில் மனைவி செய்த செயல், ஆத்திரமடைந்த கணவன் எடுத்த ஆபத்தான முடிவு.!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மனைவி தீபா.இவர்கள் தங்களது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தனர்.
மணிகண்டனும், தீபாவும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் திருப்பூரில் தன்னுடன் வேலை செய்த கீதா என்ற பெண்ணுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டு 2–வதாக திருமணம் செய்து கொண்டு தீபா, கீதா மற்றும் குழந்தைகளுடன் மணிகண்டன் வசித்து வந்தார்.
ஒருவருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், தீபா கோபத்துடன் தனது 2 குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். தீபாவை சமாதானப்படுத்தி திருப்பூருக்கு அழைத்துச்செல்ல நேற்று காலை மணிகண்டன் தேவதானப்பட்டிக்கு வந்துள்ளார்.
அங்கு வந்து தீபாவை திருப்பூருக்கு அழைத்துள்ளார், தீபா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த மணிகண்டன் கத்தியால் தீபாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து காவல் நிலையத்தில் மணிகண்டன் சரண் அடைந்தார். மேலும் நடந்த சம்பவம் அனைத்தையும் காவல்துறையில் வாக்குமூலமாக அளித்தார். இதையடுத்து தீபாவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.