மனைவியை கொன்று, தூக்கில் தொங்கிய கணவன்.. நடத்தை சந்தேகத்தால் பயங்கரம்.. பரபரப்பு சம்பவம்.!

மனைவியை கொன்று, தூக்கில் தொங்கிய கணவன்.. நடத்தை சந்தேகத்தால் பயங்கரம்.. பரபரப்பு சம்பவம்.!


husband-killed-her-wife-for-suspicion-of-behavior

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவன் காவல்துறையினருக்கு பயந்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் அருகாமையில் மங்களம் பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி (வயது 27). இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சசிகலா. தம்பதிகளுக்கு 4 வயதில் ஒரு மகனும், 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில், மனைவியின் நடத்தையில் ராமசாமி சந்தேகப்பட்டதால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கோபமுற்ற சசிகலா தனது தாயின் வீட்டிற்கு சென்ற நிலையில், ராமசாமி அதிகாலையில் மாமியார் வீட்டிற்கு சென்று, அங்கே உறங்கிக் கொண்டிருந்த தனது மனைவியை எழுப்பி வீட்டிற்கு செல்லலாம் வா என்று அழைத்துள்ளார்.

ஆனால், சசிகலா அதனை மறுத்த நிலையில், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சசிகலாவின் தலை, கால் மற்றும் கை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். சசிகலா வலியில் அலறிய சத்தம் கேட்டு அங்குவந்த தனது மாமியாரையும் வெட்டிவிட்டு  ராமசாமி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். 

thiruvanamalai

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சசிகலாவை  மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அத்துடன் ராமசாமி தனது மனைவியை கொன்றதால், காவல்துறையினருக்கு பயந்து தன்னுடைய விவசாய நிலத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.