தலைக்கேறிய போதை.! மனைவியை பீர் பாட்டிலால் சரமாரியாக குத்திய கணவன்.! கதறித்துடித்த 2 வயது மகன்.!

தலைக்கேறிய போதை.! மனைவியை பீர் பாட்டிலால் சரமாரியாக குத்திய கணவன்.! கதறித்துடித்த 2 வயது மகன்.!


husband kiled wife

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கும், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. ரவிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில், ஒருநாள் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்ட விஜயலட்சுமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் மது அருந்திவிட்டு மாமனார் வீட்டிற்கு சென்ற ரவி, மாமனாரை தாக்கிவிட்டு மனைவி மற்றும் 2 வயது மகனை அழைத்துச்சென்றுள்ளார்.

போதையில் இருந்த ரவி, வரும் வழியிலே அவரது மனைவியை பீர்பாட்டிலால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே விஜயலட்சுமி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தை அலறல் சத்தம் போட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விஜயலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். இதனையடுத்து ரவியை போலீசார் கைது செய்தனர்.