தமிழகம் காதல் – உறவுகள்

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி! அடக்கம் செய்த அடுத்தகணமே கணவன் செய்த காரியம்! கண்கலங்க வைக்கும் சம்பவம்!

Summary:

Husband commit suicide for wife dead

திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியில் வசித்து வந்தவர் வீரணன். 25 வயது நிறைந்த அவர் டெய்லராக உள்ளார். இவரது மனைவி பவித்ரா.இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அந்த தம்பதியினருக்கு தற்போது பவிக்ஷா என்ற கைக்குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த  சில மாதங்களாகவே பவித்ராவிற்கு கடுமையான வயிற்றுவலி  ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பலமருத்துவமனையில் இதற்காக சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமாகவில்லை. மேலும் வலியும் தீவிரமாகவே இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் வயிற்று வலியை தாங்கிக் கொள்ள முடியாத பவித்ரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் மனைவி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த கணவர் மனைவியின் சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளார். பின்னர் பவித்ராவிற்கு  இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 அதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த வீரணன் மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் வீட்டின் வெளியே இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தாய், தந்தையை இழந்து பச்சிளம்குழந்தை கதறி அழுதது பார்ப்போரை  கண்கலங்க வைத்தது. 


Advertisement