திருமணம் முடிந்த 6 மாதத்தில் கணவன் - மனைவி செய்த காரியம்! நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.

திருமணம் முடிந்த 6 மாதத்தில் கணவன் - மனைவி செய்த காரியம்! நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.


Husband and wife suicide after 6 months of marriage

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்து உள்ள நடுவீரப்பட்டு என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் சிவா(31). இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றத்தை சேர்ந்த விஜயலட்சுமி(28) என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்கு முன்பே பெண் வீட்டார் தனி குடித்தனம் பற்றி மாப்பிளையிடம் பேசியதாகவும், இதனால் சற்று சலசலப்பு ஏற்பட்டதில் குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி விஜயலட்சுமியை சிவா திருமணம் செய்துள்ளார். இதனால் சிவாவின் உறவினர்கள் சிலர் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமணம் முடிந்து தனது மனைவியுடன் சிவா தனியே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். மேலும், திருமணம் முடிந்ததில் இருந்து கணவன் மனைவி இருவரிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை வருவதும், இதனால் கோவித்துக்கொண்டு விஜயலட்சுமி அவர் அம்மா வீட்டுக்கு செல்வதும், அவரை சமாதானம் செய்து சிவா மீண்டும் வீட்டுக்கு அழைத்துவருவதும் வழக்கமாக இருந்துள்ளது.

suicide

இந்நிலையில் சிவா வேளைக்கு சென்றபின் அவரது மனைவி அவருக்கு போன் செய்து தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவா உடனே வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்ததில் கணவன் - மனைவி இருவரும் பிணமாக கிடந்துள்ளனர்.

தான் செல்வதற்கு முன்பே மனைவி தூக்கில் தொங்கியதாலும், மனைவி இறந்த சோகத்தில் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை திறந்து தீ வைத்து சிவாவும் இறந்து விட்டதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும், இது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் இறங்கியுள்னனர்.