நள்ளிரவில் கணவன், மனைவிக்கு துடி துடிக்க நேர்ந்த கொடூரம்.. போலீசார் விசாரணை.!

நள்ளிரவில் கணவன், மனைவிக்கு துடி துடிக்க நேர்ந்த கொடூரம்.. போலீசார் விசாரணை.!


Husband and wife killed robbery in erode

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையை சேர்ந்த தம்பதியினர் முத்துசாமி-சாமியாத்தாள். இவர்களுக்கு வசந்தி, கவிதா, கலையரசி என 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு முத்துசாமியும் சாமியாத்தாளும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுள்ளனர். அப்போது திடீரென நள்ளிரவில் வீட்டின் கதவை திறந்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.

erode

அப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த முத்துசாமி மற்றும் சாமியார் மர்ம நபர்கள் இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து இன்று காலை முத்துசாமியின் பேரன் அஜித், தாத்தா-பாட்டியை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீட்டில் ரத்த களத்தில் தாத்தாவும்- பாட்டியும் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

erode

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் போலீசாரத்தை தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து மீண்டு வந்த போலீசார் முத்துசாமி மற்றும் சாமியாத்தாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். மேலும் முத்துசாமி வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திடீரென காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.