புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
நிர்வாண புகைப்படத்தை அனுப்பி தொல்லை.! காதல் கணவன் கைது..!!
சேலத்தில் வசித்து வரும் அருள்மணி திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் அதே கம்பெனியில் பணிபுரியும் 21 வயதுடைய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அருள்மணி அவரது மனைவியை whatsapp மூலம் தகாத வார்த்தைகளால் திட்டியும் அந்த பெண்ணின் சாதியை சொல்லி கொச்சைப்படுத்தியும் பேசியுள்ளார்.
பின்னர் பெண்ணின் தங்கை மற்றும் தாயின் புகைப்படங்களை நிர்வாக புகைப்படத்தோடு மார்ஃபிங் செய்து அனுப்பி வைத்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் மகளிர் காவல் நிலையத்தில் அருள்மணி மீது புகார் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் அருள்மணியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.