தமிழகம்

தொடரும் அலட்சியங்கள், சென்னையில் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம்! அம்பலமான பகீர் உண்மையால் அதிர்ச்சி!

Summary:

hiv blood inserted in another pregnant lady in chennai

தற்போது சாத்தூரை சேர்ந்த 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு ரத்த பரிசோதனை செய்யமல் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரு மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதத்திற்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.மேலும் அலட்சியமாக செயல்பட்ட 3 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் அரசு வேலை கொடுப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு, 4 மாத கர்ப்பிணியாக இருந்த போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.

பின்னர்  8வது மாதத்தின் போது நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் அவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து கேட்டபோது ரத்தம் ஏற்றும் போது தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றசாட்டு வைத்துள்ளார். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement