அத்திவரதர் வைபவம் நீட்டிப்பா? உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தகவல்!!

அத்திவரதர் வைபவம் நீட்டிப்பா? உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தகவல்!!



high court order about athivarathar dharisanam

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். மொத்தம் 48 நாட்கள் நடக்கும் இந்த வைபவத்தில் 24 நாட்களுக்கு சயன கோலத்திலும் மீதமுள்ள 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் அத்திவரதர் காட்சியளிப்பார். 

அந்தவகையில் சயன கோலம் முடிந்து,  நின்ற கோலம் கடந்த 1-ஆம் தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து  ஆகஸ்டு 16 வரை மக்கள் அத்திவரதரை தரிசிக்கலாம். பின்னர் 17 ம் தேதி ஆக்கிரம விதிகளின்படி அனைத்து பூஜைகளும் செய்யப்பட்டு, 18 ம் தேதி குளத்தில் வைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

athivarathar

கடந்த 46 நாட்களாக நடைபெற்று வந்த அத்திவரதர் தரிசனம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. இந்நிலையில் அத்திவரதர் தரிசனத்திற்கு நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிக்கும் நிலையில் தரிசனம் நாட்களை மேலும் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு பொதுநல வழக்குகள் ஏற்கனவே தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மத வழிபாட்டு முறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என அரசுத் தரப்பில் வாதம் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம், அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீட்டிக்க அளிக்கப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.