அரசுக்கு மிகப்பெரிய அவமானம் இதுதான் - உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு.. காரணம் என்ன?.!High Court Judge Pugalendi about Govt Activity on Recreation Ponds 

 

அரசு செய்யவேண்டியதை விவசாயிகள் செய்துள்ளனர். இது அரசுக்கு அவமானம். இந்நிலை தொடரக்கூடாது என அவர் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, ஆலத்தூர் பகுதியில் உள்ள 200 க்கும் மேற்பட்ட ஏரி-குளங்கள் விவசாயிகள் சங்கத்தின் முயற்சியால் தூர்வாரப்பட்டது. இந்த விசயத்திற்கு உறுதுணையாக இருந்த விவசாயிகள் சங்கத்தினருக்கு பாராட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம் சுந்தரேஷ், உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி உட்பட பலரும் நேரில் கலந்துகொண்டனர். 

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்; வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வழக்கு.!

நீதிபதி புகழேந்தி பேச்சு

அப்போது, நிகழ்ச்சியில் பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, "நீரின் மகத்துவத்தை தெரியாமல் நாம் அதனை அழிக்க தொடங்கிவிட்டோம். அரசாங்கம் செய்யவேண்டிய விஷயம் ஒன்றை, விவசாயிகள் இணைந்து செய்துள்ளனர் என்றால், அரசு அரசுக்கே அவமானம். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் கோடி, ஐநூறு கோடி செலவில் தூர்வாருகிறோம் என்று கூறுபவர்கள், இந்த மாதிரி நிலைமையை நிச்சயம் வைத்திருக்க கூடாது" என கூறினார்.

இதையும் படிங்க: மகளின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க சென்ற தாய்க்கு நேர்ந்த கொடூரம்; இப்படியா மரணம் வரணும்?.!