மகளின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க சென்ற தாய்க்கு நேர்ந்த கொடூரம்; இப்படியா மரணம் வரணும்?.!Thanjavur Women Died Lightning Attack 

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, கற்கரைக்கோட்டை, பின்னையூர் வடக்கு நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் சரிதா. இவரின் கணவர் கலைச்செல்வன். தம்பதிகளுக்கு ரித்திகா என்ற மகள் இருக்கிறார். திருமண வயதை எட்டிய மகளுக்கு, பெற்றோர் வரன் பார்த்து இருக்கின்றனர். 

மகளின் திருமணத்திற்கு விறுவிறு ஏற்பாடு

இவர்களுக்கு பிடித்துப்போக, ஜூன் 10ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புல்லவராயன்காடு கிரமத்தில் இருக்கும் கோவிலில் திருமணம் நடைபெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், மகளின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க உறவினருடன் சரிதா சென்றுள்ளார். 

இதையும் படிங்க: மனைவிக்காக போட்ட ஸ்கெட்ச்.! மாமனார் உள்ளே நுழைந்ததால் நேர்ந்த கொடூரம்.! பகீர் சம்பவம்!!

4 பேர் படுகாயம்

இருசக்கர வாகனத்தில் இவர்கள் சென்ற நிலையில், மழை பெய்த காரணத்தால் கண்ணந்தங்குடி கிராமத்தில் மரத்தடியில் நின்றுள்ளார். அச்சமயம் இடி-மின்னலுடன் மழை பெய்ய, மின்னல் ஒன்று மரத்தின் மீது விழுந்துள்ளது. இதனால் மரத்தடியில் மழைக்கு ஒதுங்கி நின்ற 4 பேர் மயங்கி விழுந்தனர். 

தலையில் இடிவிழுந்து சோகம்

சரிதாவின் தலையில் நேரடியாக மின்னல் விழுந்த காரணத்தால், அவர் நிகழ்விடத்திகேயே பரிதாபமாக உயிரிழந்தார். மின்னல் விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்து காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு காவல் துறையினர், சரிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: #Breaking: "நீட் தேர்வை ரத்து செய்க" புதிய அரசுக்கு அதிமுக எடப்பாடி பழனிச்சாமி முக்கிய கோரிக்கை.!