36 நாட்கள் ஆகிட்டு..! நேற்று தந்தையிடம் 7 மணி நேரம்... இன்று தாயிடம் 7 மணி நேரம்! சிபிசிஐடி-யின் கிடுக்குபிடி விசாரணயில் சிக்கிய அந்த ஒரு உண்மை..! செஞ்சி சிறுமி வழக்கில் வெளியாகும் திடுக்கிடும் திருப்பம்!!!



hemalatha-missing-child-cbcid-investigation-BTYJNC

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்துக்கும் மேலாகியும் சிறுமி குறித்த தகவல் கிடைக்காத நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சிறுமியின் பெற்றோரிடம் தனித்தனியாக 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு மாயமான சிறுமி

கடந்த அக்டோபர் 11-ம் தேதி இரவு ஹேமலதா தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். பின்னர் தாய் மற்றும் பாட்டியுடன் வீட்டில் உறங்கிய சிறுமி, மறுநாள் அதிகாலையில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது வழக்கு சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் உள்ளது.

இதையும் படிங்க: 31 நாட்கள் ஆகிட்டு...! செஞ்சி சிறுமி வழக்கில் புதிதாக களமிறங்கிய சிபிசிஐடி டிஐஜி...! விடுப்பட்ட தடயத்தை பிடிக்க நேரடி ஆய்வு...! சிக்கப்போகும் அந்த நபர்..? விசாரணையின் அதிரடி வேகம்..!!!

சென்னை சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் தலைமையிலான தனிப்படை, பெற்றோரின் செல்போன்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை ஆய்வு செய்துள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையிலும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தி சில முக்கியத் தடயங்களைச் சேகரித்துள்ளதாகத் தெரிகிறது.

பெற்றோரிடம் தனித்தனியாக 7 மணி நேர விசாரணை

விசாரணையின் அடுத்தகட்டமாக ஆலம்பூண்டி அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் பெற்றோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒருவர் அளிக்கும் பதில்கள் மற்றவருக்குத் தெரியாத வகையில் வெவ்வேறு நாட்களில் விசாரணை நடைபெறுகிறது.

இதன்படி, நேற்று சிறுமியின் தந்தை வடிவேலுவிடம் காலை முதல் மாலை வரை சுமார் 7 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று தாய் பவானியிடம் அதே பள்ளியில் தனியாக அமர வைத்து 7 மணி நேரத்துக்கும் மேலாகக் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

வங்கி பரிவர்த்தனை, செல்போன் அழைப்புகள் குறித்தும் விசாரணை

பெற்றோர் இருவரும் அளித்த வாக்குமூலங்களை ஒப்பிட்டுப் பார்த்து, அவற்றில் ஏதேனும் முரண்பாடுகள் உள்ளனவா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வங்கிக் கணக்குகளில் நடந்த பணப் பரிமாற்றங்கள், யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள், செல்போன் அழைப்பு விவரங்கள் ஆகியவற்றையும் விசாரணையின்போது ஆதாரங்களாக முன்வைத்து கேள்விகள் எழுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், அண்டை வீட்டாருக்குக் கேட்டதாகக் கூறப்படும் குழந்தையின் அலறல் சத்தம், ஒரே அறையில் உறங்கிய பெற்றோருக்குக் கேட்காதது ஏன் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சேகரிக்கப்பட்ட தடயவியல் தகவல்கள் மற்றும் பெற்றோரின் வாக்குமூலங்களை ஒப்பிட்டு சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். சிறுமி ஹேமலதா எங்கு இருக்கிறார் என்பது குறித்த மர்மம் இன்னும் விலகாத நிலையில், விசாரணையின் முடிவில் முக்கியத் தகவல்கள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: சிறுமி மாயத்தில் தொடரும் மர்மம்..! உள்ளூர் ரவுடிகள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை.. நாளுக்கு நாள் சிபிசிஐடிக்கே திக் திக்..!!!