சென்னையில் கனமழை..! இயல்பு வாழ்க்கை பாதிப்பு..! விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன..!

சென்னையில் கனமழை..! இயல்பு வாழ்க்கை பாதிப்பு..! விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன..!


Heavy rains affect normal life in Chennai

நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை காலம் வழக்கத்தை விட சற்று முன்னதாக தொடங்கியது. பருவமழை தொடங்கியது முதலே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் லேசானது முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு கனமழை பெய்தது.

மதுரவாயல், நெற்குன்றம், கோயம்பேடு, ஆவடி, நந்தனம், சைதாப்பேட்டை, தி.நகர், வடபழனி, கோடம்பாக்கம், ராயப்பேட்டை, பட்டினப்பாக்கம், நுங்கம்பாக்கம், மந்தவெளி, மயிலாப்பூர், கிண்டி, அடையாறு, ஆதம்பாக்கம், எழும்பூர் மற்றும் புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக பெங்களூருவில் இருந்து வந்த விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.