தமிழகம்

திடீரென சென்னையில் புரட்டி எடுக்கும் கனமழை.! சாலையில் புரண்டு ஓடும் தண்ணீர்.!

Summary:

சென்னையில் இன்று இரவு 10:30 மணியில் இருந்து கனமழை வெளுத்து வாங்குகிறது.

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் புரெவி புயல் நாளை குமரிக் கடல் பகுதியை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

புரெவி புயல், பாம்பனுக்கு தென்கிழக்கே 530 கி.மீ தொலைவிலும், குமரிக்கு தென்கிழக்கே 700 கி.மீ தொலைவில் தொலைவிலும், இலங்கை திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 300 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. 

இந்த புயலானது கரையை கடக்கும்போது 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு  உள்ளதாகவும், புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும். இதன் காரணமாக தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இன்று அதிகாலையில் இருந்தே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்தநிலையில் சென்னையில் இன்று இரவு 10:30 மணியில் இருந்து கனமழை வெளுத்து வாங்குகிறது. நிவர் புயலின்போது பெய்த மழையை விட இன்று சென்னையில் அதிகப்படியாக கனமழை பெய்துவருகிறது.


Advertisement