விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.! வெளியான அரசாணை.!

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.! வெளியான அரசாணை.!



happy news for farmers


விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் பயிர்கடனை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகளுக்கு 12,110 கோடி ரூபாய் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதில், பத்திரங்களை வைத்து கடன் பெற்றவர்களுக்கு மட்டும் இல்லாமல், நகையை வைத்து விவசாயிகள் கடன் பெற்று இருந்தாலும், தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

farmers

அதன்படி, தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் ரூபாய் 12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதி கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், விரைவில் விவசாயிகளுக்கு கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி சான்றிதழை, முதல்வர் இ.பி.எஸ்., வழங்க உள்ளார்.