நகைகளின் ஹால் மார்க் விவரம் வெப்சைட்டில் பதிவேற்றம்; உயர் நீதிமன்ற கிளை பரிசீலிக்க உத்தரவு..!



Hall mark details of jewelery are uploaded on the website; High court branch order to consider..

மதுரை, நகைகளின் ஹால்மார்க் விபரத்தை வெப்சைட்டில் பதிவேற்றும் கோரிக்கையை பரிசீலிக்குமாறு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தேனியை சேர்ந்த அஜித்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த வழக்கில், இந்திய தர நிர்ணய ஆணையத்தால் (பிஐஎஸ்) அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க் மையங்களில் நகைகளை பரிசோதித்து, ஹால்மார்க் அங்கீகாரம் வழங்குவது வழக்கம். 

ஆனால், ஹால்மார்க் மையங்களில் சில குறிப்பிட்ட நகைகளை மட்டும் பரிசோதித்து அங்கீகாரம் பெறுகின்றனர். இதற்கு எண் வழங்கப்பட்டு, அதன் விபரம் வெப்சைட்டில் பதிவேற்றப்படும். மேலும் பெரும்பாலான நகைகளை ஹால்மார்க் மையங்களில் பரிசோதிக்கப்படுவதில்லை. ஆனால், வியாபாரிகள் பரிசோதிக்கப்படாத நகைகளையும் ஹால்மார்க் பெற்றதாக விற்பனை செய்கின்றனர். இதனால், ஹால்மார்க் மையங்கள் பாதிக்கின்றன.

இதை தடுக்க, நகைகள் வாங்கியவர், ஹால்மார்க் அங்கீகாரம் பெற்ற விபரம் போன்றவற்றை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரரின் கோரிக்கை குறித்து, இந்திய தர நிர்ணய ஆணையத்தின் நிர்வாக இயக்குனர், சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.