9 மணிநேர போராட்டம்; ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுமி உயிருடன் மீட்பு..! Gujarat Jamnagar 2 Aged Girl rescued from Borewell 

 

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் மாவட்டம், கோவணா கிராமத்தில் வசித்து வரும் 2 வயதுடைய சிறுமி, கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. 

நேற்று மாலை 06:30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் கிட்டத்தட்ட 9 மணிநேரம் போராடி சிறுமியை பத்திரமாக மீட்டனர். 

gujarat

உயிருடன் மீட்கப்பட்ட சிறுமி அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

தேசிய மீட்பு படையினரும் நிகழ்விடத்தில் தேவையான நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டதால், சிறுமி உயிருடன் மீட்கப்பட்டு இருக்கிறார்.