தமிழகம்

விடிந்தால் கல்யாணம்! புதுமாப்பிள்ளையை படுகொலை செய்த மைத்துனர்! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

grooms murdered before marriage

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலை இந்திரா காலனியை சேர்ந்தவர் முனியப்பன். 27வயது நிரம்பிய இவர் ஜே.சி.பி. டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையி இவருக்கும், விருதுநகர் மாவட்டம் குன்னூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு நிச்சயம் செய்துள்ளனர்.

இந்தநிலையில் இவருக்கு  நாளை காலை திருமணம் நடப்பதாக இருந்தது. இதையொட்டி வீட்டின் முன் பந்தல் அலங்காரம் செய்து அவரது உறவினர்களும் கூடியிருந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் முனியப்பன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுக்கிடந்துள்ளார்.

முனியப்பன் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் புதுமாப்பிள்ளை முனியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்,  போலீசார் நடத்திய விசாரணையில் மணமகன் முனியப்பனுக்கும், அவரது தங்கை கணவரான வீரசங்கிலி முருகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை முனியப்பன் தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வீரசங்கிலி முருகன், மது போதையில் நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பின்பு வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த முனியப்பனை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது தெரியவந்தது. 

இந்தநிலையில் கொலை செய்த வீரசங்கிலி முருகனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகனை அவரது தங்கை கணவரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement