மாநில அளவு சிலம்புப் போட்டிக்கு தேர்வான அரசு பள்ளி மாணவன்..மகிழ்ச்சியில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்..!

சிவகாசி விருதுநகர் பகுதியில் உள்ள ஸ்ரீவித்யா தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவில் சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவன் நவீன் 17 வயதுக்குட்பட்ட போட்டியில் இரட்டைக் கம்பு பிரிவில் பங்கேற்று முதலிடம் பெற்றுள்ளார். இதனால் நவீன் மாநில அளவில் நடைபெற இருக்கும் சிலம்புப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவன் நவீனை ஆலங்குளம் பள்ளி தலைமையாசிரியர் முத்துராஜ் பாராட்டினார். மேலும் மாணவனுக்கு பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கண்ணன், மாரிமுத்து மற்றும் ஆனந்த் குமார் நவீனின் வெற்றியால் நெகிழ்ச்சி அடைந்து அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.