இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?.. தங்கப்பிரியர்களுக்கு அதிர்ச்சி.!!gold-silver-price-today-RPK97R

 

இந்தியாவில் தங்கத்தின் விலை கடுமையான உச்சத்தில் இருந்தாலும் அதனை மக்கள் தொடர்ந்து வாங்குவதால் அதன் விலை என்பது சற்றும் குறையாமல் ஏற்றத்திலேயே தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது ரூ.60 உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5915-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.5975-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

tamilnadu

அதேபோல ஒரு சவரன் தங்கத்தின் விலையானது நேற்று ரூ.46,040-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.47,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.1760 உயர்ந்துள்ளது.

மேலும் வெள்ளியின் விலை இன்று கிராம் ரூ.83.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தங்கத்தின் விலை ரூ.83,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.