ஆடிமாசத்துலயே இப்படியா..? தாறுமாறாக அதிகரித்த தங்கம் விலை.! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!

ஆடிமாசத்துலயே இப்படியா..? தாறுமாறாக அதிகரித்த தங்கம் விலை.! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!


gold rate increased

உலகளவில் தங்கம் பயன்பாடு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சாதாரண குடும்பம் தொடங்கி பெரிய பணக்காரர்கள் வரை வீட்டில் ஒரு விசேஷம் என்றால் அங்கு தங்கத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. தற்போது ஆடி மாதம் என்பதால் சுப முகூர்த்தங்கள் குறைவாகவே இருக்கும். இதனால் அடுத்த மாதம் ஆவணி மாதத்தில் அதிகப்படியான முகூர்த்த நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சமீப காலமாகவே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் அது நடுத்தர மக்கள் தங்கம் வாங்கவே யோசித்து வரும் நிலையில், தற்போது தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 88 விலை உய்ர்ந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 168 விலை உயர்ந்துள்ளது.

gold rate

நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,541 ஆகவும்,ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 36,328-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, ஒரு கிராம் ரூ. 4,905 ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ. 39,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 4,562 ஆகவும், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 36,496-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 4,926 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு ரூ. 100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 72.20 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ. 72,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.