மீண்டும் ஜெட் வேகத்தில் செல்லும் தங்கம் விலை.! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!

மீண்டும் ஜெட் வேகத்தில் செல்லும் தங்கம் விலை.! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!


gold rate increased

கொரோனாவால் தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கியதால் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவுக்கு அதிகரித்து வந்தது. கொரோனா சமயத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. 

இந்தநிலையில் சமீபத்தில் நாடுமுழுவதும் கொரோனா பரவல் சற்று குறைந்துவந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தது. தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.

gold rate

சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 64 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 4,460 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 35,680 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 64 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 4,819 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 38,552 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ. 73.40 ஆக விற்பனை செய்யப்படுகிறது.