ஆத்தாடி... வரலாறு காணாத அளவிற்கு தங்கத்தின் விலை உயர்வு! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

ஆத்தாடி... வரலாறு காணாத அளவிற்கு தங்கத்தின் விலை உயர்வு! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!


gold rate increased

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று சவரனுக்கு 152 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் இல்லத்தரசிகள் வேதனையடைந்துள்ளனர்.

தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ.39 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத உயர்வை தொட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.19 உயர்ந்து சவரன் ரூ.39,232-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,904-ஆக அதிகரித்துள்ளது.

gold rate

ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) நேற்று ரூ.5,129லிருந்து இன்று ரூ.5,148 ஆக உயர்ந்துள்ளது.