தமிழகம் வர்த்தகம்

நகை வாங்க நல்ல சமயம்!! தங்கம் விலை சரிவு!! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா??

Summary:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து, ரூ.36,776-க்கு விற்பனை செய்யப

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து, ரூ.36,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா ஆரம்ப காலத்தில் இருந்தே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து உச்சத்தை எட்டியுள்ளது. ஒருசவரன் தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரம் நெருங்கி அதிர்ச்சியை அளித்தது. இருப்பினும் அவ்வப்போது தங்கத்தின் விலை குறைந்து மக்களுக்கு சற்று ஆறுதலையும் கொடுத்தது.

இந்நிலையியல் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,597-க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.36,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Advertisement