10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த கிழட்டு காமுகன்.. போக்சோவில் தூக்கி உள்ளே வைத்த போலீசார்..!girl-sexually-harassed-by-65-years-old-doctor

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 65 வயது கிழட்டு காமுகன் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள கொடுங்கையூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் 3ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவர் ராயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்தார்.chennaiஅப்போது எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சித்தா கிளினிக் நடத்தி வரும் பாலசுப்பிரமணியன் என்ற 65 வயது காமுகன் சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்தது தெரியவந்தது.

இதனால் சிறுமியின் தாயார் மகாகவி பாரதி நகர் காவல் நிலையத்தில் இந்த விஷயம் தொடர்பாக புகாரளித்த நிலையில், பாலசுப்பிரமணியத்தை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.