கணவரை இழந்த நிலையில், புதரில் சடலமாக மீட்கப்பட்ட பெண்! போலீசாரையே அதிரவைத்த பகீர் பின்னணி!girl rescued as deadbody in salem

சேலம் மாவட்டம் தப்பகுட்டை கிராமத்தில் வசித்து வந்த 30 வயது பெண், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்து ஒன்றில் தனது கணவரை இழந்த நிலையில்,  இரு பெண்குழந்தைகளுடனும், மாமியாருடனும் தனியாக வசித்து வந்துள்ளார்.மேலும் தனியார் மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி குடும்பத்தையும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப் பெண் தலையில் அடிபட்ட நிலையில் புதர் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

 மேலும் அவரது பிரேத பரிசோதனையில், அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த பெண்ணிற்கு பார்த்திபன் என்ற 21 வயது நபருடன் தொடர்பு இருப்பதும்,  அவர் அப்போது அப்பெண்ணிற்கு பணம் கொடுத்து உதவி வந்ததும் தெரியவந்தது.

girl dead

இந்நிலையில் அவர் நான் கொடுத்த பணத்தை அந்த பெண்ணிடம் திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அவரோ பணத்தை தர முடியாது எனவும், தங்களுக்கு இடையேயுள்ள தகாத உறவு குறித்து அந்த இளைஞனின் தாயாரிடம் கூறி விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.இதில் ஆத்திரமடைந்த பார்த்திபன் அந்த பெண்ணை தள்ளியதில்அவர் தலையில் கல்மோதி மயக்கம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் பயந்து அவர் அங்கிருந்து ஓடி விட்ட நிலையில், தலைக்கேறிய போதையில் அப்பாதையில் வந்த  பழனிச்சாமி மற்றும் ரவி இருவரும்  அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மயக்க நிலையில் இருந்த அப்பெண் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. பின்னர்வழக்கு பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.