தமிழகம் லைப் ஸ்டைல்

பட்டப்பகலில் பயங்கரம்! துரோகம் செய்த கள்ளக்காதலியை குத்தி கொன்ற இளைஞர்

Summary:

Girl murdered in krishnagiri by boy friend

கிருஷ்ணகிரியில் தனியார் கடை ஒன்றில் பணியாற்றிய பெண்ணை பட்டப்பகலில் அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவோிபட்டணத்தைச் சேர்ந்தவர் செல்வி(32). திருமணமான இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து தன் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். செல்வி கிருஷ்ணகிரியிலுள்ள தனியார் பரிசு கடை ஒன்றில் வேலைப்பார்த்தார். 

செல்விக்கும் அதே பகுதியில் தனியார் ஜவுளிக்கடையில் பணியாற்றும் தௌலத் (30) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில நாட்கள் இருவரும் நட்பாக பழக நாளடைவில் நட்பு நெருக்கமாகியுள்ளது. செல்வியின் பணத்தேவைகளுக்காக தௌலத் அவ்வப்போது பணம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் செல்வி வேறு ஒருவருடன் பழகியுள்ளார். இதனை தெரிந்த தவ்லத் செல்வியிடம் விசாரிப்பதற்காக செல்வி வேலை பார்க்கும் கடைக்கு இன்று மாலை 4 மணிக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் கடையில் வேறு யாரும் இல்லை. அங்கு செல்வி முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே ஆத்திரமடைந்த தவுலத் அங்கிருந்த கத்தியால் செல்வியை கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கடுமையாக குத்தியுள்ளார். இதனால் ரத்தவெள்ளத்தில் மிதந்த செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து தப்பித்து சென்ற தவுலத் கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் தான் கொலை செய்த கத்தியுடன் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார். பின்னர் நடந்தவற்றை பற்றி போலீசாரிடம் விளக்கியுள்ளார்.

தவுலத் அவ்வப்போது செல்விக்கு பணம் உதவி செய்து வந்த நிலையில் இன்று தனக்கு இரண்டாயிரம் பணம் தேவைப்படுவதாக செல்வி கேட்டதை அடுத்து தான் பணம் கொடுப்பதற்க்காக செல்வி பணி புரியும் கடைக்கு வந்ததாகவும், அப்போது செல்வி வேறு ஒரு ஆணுடன் செல்போன் பேசிகொண்டு இருந்ததாகவும் கூறியுள்ளார்.

அது தொடர்பாக கேட்டதை அடுத்து தங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அதனால் ஆத்திரம் அடைந்த தான் கடையில் இருந்த கத்தியை எடுத்து செல்வியை கழுத்து வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியதாகவும்  செல்வி உயிரிழந்ததை அடுத்து தான் போலீஸில் சரணடைந்ததாக தெரிவித்துள்ளார்.


Advertisement