தமிழகம்

தனது கடையில் பணிபுரிந்த, இளம்பெண் அனுப்பிய ஒத்த புகைப்படம்! அதிர்ச்சியில் ஆடிப்போன தொழிலதிபர்! பரபரப்பு சம்பவம்!

Summary:

Girl marping photo and blackmailed her shop owner

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வருபவர் பரணிதரன். இவரது கடையில் ஷர்மிளா என்ற 21 வயது பெண் பணியாற்றி வந்துள்ளார். டிக்டாக்கில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவருக்கு  தூத்துக்குடியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. 

அதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டு கடந்த 10 மாதங்களாக தூத்துக்குடியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருமணமான பிறகும் ஷர்மிளா ஜவுளிக்கடை உரிமையாளர் பரணிதரணுடன் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஷர்மிளா திடீரென பரணிதரனின் மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து, ஆபாசமாக மாற்றி அதனை பரணிதரணுக்கு அனுப்பியுள்ளார். மேலும் அந்த படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க 40 லட்சம் பணம் தரவேண்டும் எனவும் மிரட்டி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பரணிதரன் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், போலீசார் ஷர்மிளா மற்றும் சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து  செல்போன்களை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டபோது, இதுபோன்று ஏராளமான புகைப்படங்களை மார்பிங் செய்து வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார்அவர்களிடம் இதுகுறித்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Advertisement