தமிழகம்

ஓயாமல் அழைத்த கள்ளக்காதலன்! தாயுடன் சேர்ந்து கள்ளக்காதலி செய்த கொடூரம்! ஒரு அதிர்ச்சி சம்பவம்!

Summary:

Girl killed man in chithambaram for illegal affair

சிதம்பரம் அருகே கள்ளக்காதலனை காதலி கொலைசெய்துள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே கீரைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவர் காவல்துறை நண்பர்கள் குழுவில் பணியாற்றியதாகவும், அதன்பின்னர் இவரது செயல்பாடுகள் சரி இல்லாததால் காவல்துறை குழுவில் இருந்து நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரீனிவாசனுக்கும், அதே பகுதியை சேர்ந்த தாமரை செல்வி என்ற பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல், தாமரை செல்விக்கு வேறொரு ஆணுடனும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால், தன்னுடன் மட்டும்தான் உறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஸ்ரீனிவாசன் தாமரையிடம் கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல், சம்பவத்தன்று ஸ்ரீனிவாசன் தாமரை வீட்டிற்கு சென்று வலுக்கட்டாயமாக அவரை உறவுக்கு அழைத்துள்ளார். அதற்கு தாமரை செல்வி மறுக்க, ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கீழே விழுந்த ஸ்ரீனிவாசன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.

இதனால் பதற்றமான தாமரை தனது தாயார் உதவியுடன் ஸ்ரீனிவாசனின் உடலை அருகில் இருந்த கால்வாயில் தள்ளிவிட்டனர். இதனை தொடர்ந்து ஸ்ரீனிவாசனின் உடலை கைப்பற்றிய போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஸ்ரீனிவாசனை கொன்றது தாமரைதான் என்பதை கண்டுபிடித்து தற்போது அவரையும் அவரது தாயாரையும் சிறையில் அடைத்துள்ளனனர்.


Advertisement