கல்லூரி மாணவியை அவமானப்படுத்தி பேராசிரியர் செய்த காரியம்.! மனமுடைந்து ஆசிட்டை குடித்த இளம்பெண்!!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுவாமிமலை அருகே ஆலமன் குறிச்சி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் அன்பழகன். இவரது மகள் கவுசல்யா. 23 வயது நிறைந்த இவர் எம்.எஸ்சி படிப்பை முடித்து விட்டு கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் எம்.பில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் கவுசல்யா தனது ஆய்வுக் கட்டுரையை தனது பேராசிரியர் ரவிச்சந்திரன் என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளாமல் ஏதாவது குறைகூறி மாணவியை அலைய விட்டுள்ளார்.
இதனால் பொறுமையை இழந்த கவுசல்யா இதுகுறித்து ரவிச்சந்திரனிடம் சென்று ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என விளக்கம் கேட்டுள்ளார். அப்பொழுது அவர் ஆத்திரமடைந்து மாணவியின் சமூகத்தை குறிப்பிட்டு கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையடைந்த கவுசல்யா கல்லூரி ஆய்வகத்தில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்துள்ளார். அதனை தொடர்ந்து மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் தூக்கி சென்று கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து கவுசல்யாவின் தாய் ஜோதி இதுகுறித்து கும்பகோணம் போலீசில் புகார் செய்துள்ளார். மேலும் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார்
பேராசிரியர் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.