தமிழகம்

வீட்டுவாசலில் ஆசையாக கோலம் போட்ட 8 வயது மகள்! சற்று நொடியில் தாயின் கண்முன் துடிதுடிக்க நேர்ந்த விபரீதம்!

Summary:

girl dead by accident infront of mother

திருச்சி ஸ்ரீரங்கம் கீழஉத்தரவீதியை சேர்ந்தவர் மாதவன். இவரது மனைவி சொர்ணலட்சுமி. இவர்களது மகள் தீபரேகா. 8 வயது நிறைந்த அவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். மாதவன் வெளிநாட்டில் வேலை செய்துவந்ததால் சொர்ணலட்சுமி, தீபரேகாவுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் அதிகாலை தாயும், மகளும் எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்துள்ளனர். மேலும் சிறுமி தீபரேகா வாசலில் கோலம் போட்டுள்ளார், அப்பொழுது தாய் சொர்ணலட்சுமி அருகே நின்று மகள் கோலம் போடும் அழகை கண்டு ரசித்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று சிறுமியின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதனை கண்ட சொர்ணலட்சுமி கதறி துடித்துள்ளார். மேலும் அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, சிறுமியை மீட்டு அவசர அவரசராமாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சிறுமியின் தாயாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அடங அதனை தொடர்ந்து அவர்கள் பல விசாரணைக்கு பிறகு ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர்தான் அந்த காரை ஓட்டி வந்து சிறுமியின் மீது மோதியுள்ளார் என்பது தெரியவந்டுள்ளது. அதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement