தமிழகம்

காதலன் சொன்ன சொன்ன அந்த வார்த்தை!! தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட காதலி!

Summary:

girl commit suicide for her boy friend

சென்னையில் ஆபாசமான வார்த்தையால் காதலன் திட்டியதால் மனமுடைந்த காதலி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகள் வளர்மதி. இவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த வளர்மதி திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைக்கண்ட அவரது தாய் பவானி கதறித் துடித்தார்.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது காவலர்கள் வீட்டை சோதித்தபோது கடிதமொன்று சிக்கியது, அதில் புளியந்தோப்பை சேர்ந்த மணிகண்டன் என்பவரை காதலித்து வந்ததாகவும், ஆபாசமாக திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும் கடிதத்தில் எழுதியிருந்தார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வர்மத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மணிகண்டனை கைது செய்யுமாறு போராட்டத்தில் குதித்தனர், இதனையடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.


Advertisement